ஈரோடு சம்பத் நகர் மெயின் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை முன்பு உள்ள சாலை மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஏராளமான பேர் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?