போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை

Update: 2026-02-08 11:34 GMT

புதுக்கோட்டை மாவட்டம் குமரமலை முருகன் கோவிலுக்கு செல்லும் சுமார் 1 கிலோமீட்டர் நீளமுள்ள சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது முற்றிலும் சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் இந்த வழியாக கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே பக்தர்களின் நலன்கருதி இந்த சாலையை சீரமைத்து புதிய தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்