ரிஷிவந்தியம் அருகே சித்தால்- பள்ளிப்பட்டு கிராமத்திற்கு வனப்பகுதி வழியாக செல்லும் தார் சாலை பலத்த சேதமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அங்கு புதிதாக தார் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.