திருச்சி மாவட்டம் மணப்பாறை அடைக்கம்பட்டி பகுதியில் உள்ள சாலை போடப்பட்டு பல வருடங்கள் ஆனதால் மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் சில நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.