புதுக்கோட்டை ஒன்றியம் ஆதனக்கோட்டை அருகே உள்ள தொண்டைமான்ஊரணி ஊராட்சிக்கு உட்பட்ட இந்திராநகரில் இருந்து ராஜாபகதூர் வரை செல்லும் தார்சாலை மிகவும் பழுதடைந்து கப்பிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.