தர்மபுரி மாவட்டம் பாலஜங்கமஅள்ளி ஊராட்சிக்குட்பட்டது புதிய காலனி. இந்த புதிய காலனியில் 30-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இவ்வாறு உள்ள குடியிருப்பு வீடுகள் முன்பு நல்லம்பள்ளி-நாகர்கூடல் இடையே செல்லும் பிரதான தார்சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக பள்ளி, கல்லூரி வாகனங்கள் அதிகளவில் வந்து செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயம் அடைந்து வருகின்றனர். உயிரிழப்பும் ஏற்படுகிறது. எனவே புதிய காலனி முன்பு சாலையில் 2 அல்லது 3 வேகத்தடைகள் அவசியம் அமைக்க வேண்டும்.