புதுக்கோட்டை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் பழைய பஸ் நிலையத்தில் இருந்து டி.வி.எஸ். கார்னர் வரை உள்ள சாலை அகலப்படுத்தும் பணிக்காக சாலையோரத்தில் உள்ள வடிகால்களில் மண் நிரப்பப்பட்டது. ஆனால் மாற்று வசதி ஏதும் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் அப்பகுதியில் மழைநீர் சாலைகளில் தேங்குவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.