பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உழவர் சந்தை, வார சந்தை, வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்டவை இருப்பதால் இப்பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் இந்த சாலை குறுகலாக காணப்படுவதினால் அடிக்கடி போக்குவரத்து இடையூறு ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி இந்த சாலையை அகலப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.