அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் புதிய பஸ் நிலையம் அருகே மூணு சென்ட் காந்திநகர் பகுதியில் முறையான சாலை வசதி இல்லாததால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் அவ்வழியாக செல்ல மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே அப்பகுதியில் முறையான சாலை வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.