ஒளிரும் பலகை அவசியம்

Update: 2026-01-11 16:31 GMT

வெண்ணந்தூர் பகுதியில் இருந்து ராசிபுரம் செல்லும் சாலையில் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் பல இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளது. இதற்கு அபாய எச்சரிக்கை பலகைகள் எதுவும் வைக்கவில்லை. பள்ளங்கள் இப்போது தெரியாமல் வாகன ஓட்டிகள் தடுமாறி பள்ளத்தில் விழும் சூழ்நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் கவனத்தில் கொண்டு ஆபத்தான இடங்களில் முன்னெச்சரிக்கை மற்றும் ஒளிரும் பலகை வைத்து விபத்தை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்