சென்னை எம்.சி. சாலை மற்றும் ஜி.ஏ.சாலை ஆகிய பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் பலதரப்பட்ட சாலை சீரமைப்பு பணிகள் நடந்தன. இதற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக சரிசெய்யப்படவில்லை. மண்மேடாக காட்சியளிக்கும் சாலைகள் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. மக்களின் பயணம் இயல்பாக அமைய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.