கிடப்பில் போடப்பட்ட சாலை அமைக்கும் பணி

Update: 2026-01-11 11:26 GMT

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே பெரியாக்குறிச்சி கிராமம் கிழக்கு தெருவில் உள்ள சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது. அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கைக்கு இணங்க புதிய தார்சாலை அமைக்ககும் பணி தொடங்கப்பட்டது. சாலை அமைப்பதற்காக பழைய சாலை தோண்டப்பட்ட நிலையில், பணிகளை தொடராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே கிடப்பில் போடப்பட்டுள்ள பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்