வெண்ணந்தூர் பகுதியில் இருந்து ராசிபுரம் செல்லும் பிரதான சாலையில் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் பல இடங்களில் முன்எச்சரிக்கை பலகை வைக்காமல் சாலை பணி நடைபெறுகிறது. இதனால் அடிக்கடி அந்த பகுதிகளில் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே நெடுஞ்சாலை துறையினர் சாலை பணிகளை விரைந்து முடித்து விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.