புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே நெடுவாசலில் இருந்து மின்வாரிய அலுவலகம், வேளாளர் தெரு, நல்லாண்டார் கொல்லை வழியாக கறம்பக்குடி செல்லும் இணைப்பு சாலை முற்றிலும் சேதமடைந்து மண்சாலை போல் காட்சியளிக்கிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மண்சாலையை தார்சாலையாக மாற்றியமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.