புதுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் மச்சுவாடி பகுதி உள்ளது. இப்பகுதியில் உள்ள பிரதான சாலையின் வலதுபுறம் பிரிந்து செல்லும் சாலையில் அரசு பள்ளி உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. இதனால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்த சாலை சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.