சென்னை மாநகராட்சி 131-வது வார்டுக்குட்பட்ட டாக்டர் சுப்பராயன் நகர் 6-வது தெருவில் உள்ள 2-வது குறுக்கு தெருவின் முனையில் உள்ள பாதாள சாக்கடையின் மூடி சேதமடைந்து ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. இதுதொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியானது. சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பாதாள சாக்கடையின் மூடியை சீரமைத்து கொடுத்துள்ளனர். உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், அதற்கு தூண்டுதலாக நின்ற 'தினத்தந்தி' பத்திரிகைக்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.