மூலக்குளத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் குண்டு சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இந்த வழியாக மேட்டுப்பாளையம் தொழில்பேட்டைக்கு செல்லும் கனரா வாகனங்களால் விபத்து அபாயம் உள்ளது. சேதமடைந்த சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும்.