சேலம் மாநகராட்சி 49-வது வார்டில் அன்னதானப்பட்டி நடுத்தெரு உள்ளது. இங்கு ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மழை பெய்தால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து குண்டும், குழியுமான சாலைைய சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை இப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.