திட்டக்குடி அடுத்த காரையூர் கிராமத்தில் உள்ள சிமெண்டு சாலையானது சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே உயிரிழப்புகள் ஏதும் நிகழும் முன் அதிகாரிகள் விரைந்து தார்சாலை அமைத்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.