நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அடுத்த தொட்டிபட்டி ஊராட்சி மாரியம்மன் கோவில் பகுதியில் இருந்து மணல்காடு செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் புதிய தார்சாலை அமைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.