மூலனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட எடைக்கல்பாடி ஊராட்சியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக பிரதான தார்ச்சாலை போடப்பட்டது. இந்த சாலை போடப்பட்டு பல ஆண்டுகளாக சீரமைக்காமல் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. தினமும் அதிக வாகனங்கள் பயணிக்கும் சாலையாக இருந்தும், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளபடவில்லை. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைத்தடுமாறி கீழே விழுந்து அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும்நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் சாலைைய சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.