ஈரோடு முத்தம்பாளையம் பகுதி 1 மற்றும் பகுதி 2 வழியாக சூரம்பட்டி வலசு மற்றும் மகாராஜா தியேட்டர் வழியாக செல்லும் சாலையின் பல இடங்களில் குண்டும்- குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி சென்று வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுப்பார்களா?