மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம் ஆர்.கோபிநாதம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது ராமாபுரம் அருந்ததியர் நகர். இந்த பகுதி தார்சாலை ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டமும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி இந்த தார்சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமார், கோபிநாதம்பட்டி.