ஏரியூரில் இருந்து மேச்சேரிக்கு தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. செல்லமுடியில் இருந்து பழையூர் வரை 12 கிலோமீட்டர் தார்சாலை சேதமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் சேதமடைந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-மாணிக்கம், வத்தல்பட்டி.