குண்டும் குழியுமான சாலை

Update: 2025-09-21 09:17 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சி நூம்பல், புளியம்பேடு கிராமத்தில் உள்ள பாலாஜி நகர் சாலை குண்டும் குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது. இதனால் இந்த சாலையை பயன்படுத்தும் சிறியோர் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். விபத்துகள் குறித்த அச்சம் சாலையை கடந்து செல்பவர்களுக்கு உள்ளது. மழைக்காலங்களில் மழைநீர் சாலைகளில் தேங்கி சாக்கடைபோல துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்