பொள்ளாச்சி அருகே ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சியில் வசியாபுரம் முதல் சிங்காநல்லூர் வரை உள்ள சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் உள்ளது. அந்த சாலையில் வாகன போக்குவரத்து அதிகம். ஆனால் இன்னும் சீரமைக்காமல் விட்டு உள்ளனர். இதனால் தினமும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். மழை பெய்தால் அந்த சாலையை பயன்படுத்துவது மிகவும் சிரமமாக உள்ளது. எனவே அந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.