சாலை விரிவாக்க பணி மந்தம்

Update: 2025-12-14 17:29 GMT
அரசூர் கூட்டுரோடு அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி மந்தமாக நடைபெற்று வருகிறது. மேலும் சாலையும் பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சாலையில் உள்ள பள்ளத்தில் சிக்கி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்