மேம்பாலம் அமைக்கலாமே!

Update: 2025-12-14 17:09 GMT

தலைவாசல் அருகே சொக்கனூரில் இருந்து வீரகனூர் செல்லும் வழியில் சொக்கனூர் தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலத்தில் மழைக்காலத்தில் மழைநீர் பெருக்கெடுத்து செல்வது வழக்கம். சொக்கனூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இந்த தரைப்பாலத்தையே பிரதான பாதையாக பயன்படுத்தி வருகின்றனர். தற்போது தரைப்பாலத்தை தாண்டி தண்ணீர் செல்கிறது. இதனால் மாணவ, மாணவிகள், பெண்கள் அச்சத்துடனேயே தரைப்பாலத்தை கடந்து செல்கின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்