சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2026-02-08 11:35 GMT

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகாவிற்குட்பட்ட பூஞ்சோலை புதூர் பஸ் நிலையத்தில் இருந்து பெரிய சேங்கல் சாலை சந்திக்கும் இடமான எல்லை கருப்பு கோவில் வரையுள்ள சாலை போடப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால், தற்போது முற்றிலும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இவ்வழியாக பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் சாலையில் வாகனங்கள் செல்லும் போது ஏற்படும் புழுதியால் இப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே இநத் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்