தார்சாலை அமைக்கப்படுமா?

Update: 2025-09-07 15:29 GMT

ராசிபுரம் தாலுகா கூனவேலம்பட்டி புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகிலிருந்து ஆணைக்கட்டிபாளையம் வழியாக ஆண்டகலூர் கேட் சேலம்-நாமக்கல் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அவ்வழியே இருசக்கர வாகனத்தில் செல்லும் பொதுமக்கள் இரவில் தடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. எனவே புதிதாக இந்த பகுதியில் தார்சாலை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சபரி, ராசிபுரம்.

மேலும் செய்திகள்