தார்சாலை அமைக்கப்படுமா?

Update: 2025-09-07 15:28 GMT

ராசிபுரம் தாலுகா குறுக்கபுரம் கிராமத்தில் இருந்து குருசாமிபாளையம் அருகே உள்ள தனியார் பள்ளி வரையில் தார்சாலை அமைக்க கடந்த சிலநாட்களுக்கு முன் சேதமான சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்த்து எடுக்கப்பட்டது. இதன்காரணமாக 2 சக்கர வாகனங்கள், கார், சரக்கு ஆட்டோ போன்றவை பழுதாகின்றன. இதனால் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் உள்ளனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக புதிய தார்சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நித்தியானந்தன், குறுக்கபுரம்.

மேலும் செய்திகள்