தர்மபுரி ரெயில் நிலையத்தின் மேற்கு பகுதியில் வெண்ணாம்பட்டி-பிடமனேரி பகுதிகளை இணைக்கும் தார் சாலை உள்ளது. இந்த சாலை கடந்த சில ஆண்டுகளாக சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலை வழியாக இருசக்கர வாகனங்களில் அதிக அளவில் சென்று வருகிறார்கள். சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பலமுறை மனு அளித்தும் பலனில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
முருகேசன், தர்மபுரி.