தர்மபுரி நகரில் பென்னாகரம் சாலை மிகவும் முக்கியம் வாய்ந்த சாலையாகும். எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும் இந்த சாலையில் குமாரசாமிப்பேட்டை ரெயில்வே மேம்பாலம் முதல் சோகத்தூர் கூட்ரோட்டில் உள்ள அதியமான்கோட்டை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் வரை 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டு சாலை நடுவில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் இந்த பிரதான சாலை இருண்டு கிடப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இரவு நேரங்களில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலை வழியாக வந்து செல்கின்றன. எனவே இந்த பிரதான சாலையின் நடுவில் மின் விளக்குகள் அமைக்கப்படுமா?
-சுரேஷ், சோகத்தூர், தர்மபுரி.