கடத்தூர் அடுத்த ரேகட அள்ளி ஊராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் பெருமாள் கோவில் வழியாக முல்லை நகர் செல்லும் தார்சாலை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. இந்த தார்சாலை நாளடைவில் சேதம் அடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாகவும், மேடு, பள்ளமாகவும், கரடு முரடாகவும் காட்சி அளிக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் இந்த சாலை பயன்படுத்துவதில் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி இந்த சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-இமயவர்மன், ரேகடஅள்ளி.