நல்லம்பள்ளி அடுத்த பங்குநத்தம் ஊராட்சிக்குட்பட்ட ராஜாகொல்லஅள்ளி முதல் எச்சனஅள்ளி வரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தார் சாலை போடப்பட்டது. இந்த சாலை வழியாக நாள்தோறும் டவுன் பஸ்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள், தர்மபுரி முதல் இண்டூர் பங்குநத்தம் வழியாக, ஏறுபள்ளி, எச்சனஅள்ளி, பென்னாகரம் வரை சென்று வருகின்றன. மேலும் அவ்வழியாக 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ. மாணவிகள் மற்றும் கிராம மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் குண்டும், குழியுமாக மாறியிருப்பதால் போக்குவரத்திற்கு பயனற்ற சாலையாக உள்ளது. எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-ஊர்பொதுமக்கள், ராஜாகொல்லஅள்ளி.