அலங்கியம் ஊராட்சிக்கு உட்பட்ட தார்சாலை அலங்கியத்தில் இருந்து மேற்கு வட்டமலைபுதூர், கடத்தூர், கணியூர் செல்லும் சாலையின் இருபுறமும் 1½ கிலோ மீட்டர் தூரம் புதர்கள் மண்டிக்கிடக்கிறது. இதனால் வாகனங்கள் விலகி செல்ல முடியவில்லை. எனவே சாலையின் இருபுறமும் உள்ள புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.