கோவையை அடுத்த கோவைப்புதூரில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் குடிநீர் வீணாக ஓடியது. உடனே சாலையில் குழி தோண்டி குழாய் உடைப்பை சரி செய்தனர். அதன்பிறகு மண்ணை நிரப்பி குழியை மூடினார்கள். ஆனால் சாலையை சீரமைக்கவில்லை. இதனால் மழை பெய்தால் சாலை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும்போது வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.