கோவை மாநகராட்சி 42-வது வார்டுக்கு உட்பட்ட வேலாண்டிபாளையம் டாக்டர் அம்பேத்கர் சாலையில் பல இடங்களில் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. இதனால் அந்த வழியாக சென்று வருபவர்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.