ஈரோடு ரிங் ரோட்டில் இருந்து தெற்குப் பள்ளம் வழியாக திண்டல் செல்லும் சாலையில் ஆங்காங்கே பல இடங்களில் பள்ளம் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. தினமும் விபத்துகள் நடந்து வருகின்றன. மோசமான நிலையில் காணப்படும் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?