பர்கூர் தாலுகா கந்திகுப்பத்தில் ஓணி தெரு மற்றும் மசூதி தெருவில் இருபுறங்களிலும் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிக்கு செல்லும் சாலை சேதமடைந்தும், ஜல்லிக்கற்கள் பெயர்ந்தும், குண்டும், குழியுமாக உள்ளது. லேசான மழை பெய்தால்கூட இந்த சாலையில் தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் இந்த சாலையில் பொதுமக்கள் நடக்கவும், வாகனங்களில் செல்லவும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிறார்கள். எனவே சேதமடைந்த இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், கந்திகுப்பம்.