வேகத்தடை வேண்டும்

Update: 2025-06-22 10:58 GMT

தஞ்சை டி.பி.சி.நகர் பெண்கள் கல்லூரி செல்லும் சாலை, கூட்டுறவு காலனி-புதிய பஸ் நிலையம் இணையும் பகுதி சாலையில் வேகத்தடைகள் இல்லை. இதனால் வாகனங்கள் அதிவேகமாக அந்த வழியாக சென்று வருகின்றன. வேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி சிறு,சிறு விபத்துகள் அரங்கேறி வருகின்றன. இதன்காரணமாக பொதுமக்கள் அச்சத்துடன் சாலையை கடந்து செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்

சாலை பழுது