சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2025-06-22 10:54 GMT

மயிலாடுதுறை வழுவூர் மேலவீதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே சாலை முறையான பராமரிப்பின்றி இருக்கிறது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சாலை குண்டும்,குழியுமாக இருக்கிறது. மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்குவதால் அந்த வழியாக பொதுமக்கள்,மாணவ-மாணவிகள் நடந்து செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது. வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது