சேலம் நிலவாரப்பட்டி பஸ் நிறுத்தம் எதிரே உள்ள பாலத்தின் கீழ் பிரதான சாலையையொட்டி ஆபத்தான பள்ளம் உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் இந்த பள்ளம் இருப்பது தெரியாமல் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். இதன் அருகில் பிரதான சாலை உள்ளதால் விபத்து ஏதும் நடக்கும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆபத்தான பள்ளத்தை சரி செய்ய வேண்டும்.
-கார்த்திகேயன், நிலவாரப்பட்டி.