பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகம் எதிரே முத்துப்பேட்டை சாலை, புதிய வீட்டு வசதி வாரிய பஸ் நிறுத்தம் அருகே உள்ள சாலையில் வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றனர். இதனால் மேற்கண்ட பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. வேகமாக செல்லும் வாகனங்களால் பொதுமக்கள் அச்சத்துடன் சாலையை கடந்து செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதிகளில் ஆய்வு செய்து தேவையான இடத்தில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.