சேதமடைந்த சாலை

Update: 2025-06-01 19:52 GMT

 நாமக்கல் - திருச்சி சாலையில் பொன்விழா நகர் குடியிருப்பு உள்ளது. இந்த பகுதிக்கு செல்ல திருச்சி பிரதான சாலையில் இருந்து வரவேற்பு வளைவு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதியில் உள்ள சாலையில் ஜல்லி பெயர்ந்து சேதமடைந்து காணப்படுகிறது. இப்பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியும் உள்ளது. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவ, மாணவிகள் கடும் அவதி அடைவார்கள். சேதமடைந்துள்ள இந்த சாலையில் அவசர தேவைக்காக பயன்படுத்த முடிவதில்லை. எனவே பழுதான இந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

-மோகன், நாமக்கல்.

மேலும் செய்திகள்