குத்தாலம் வட்டம் அஞ்சாறு வார்த்தலை கடைவீதி போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருந்து வருகிறது. இந்த கடைவீதி சாலையில் வேகத்தடை இல்லை. இதன்காரணமாக வாகனங்கள் அதிவேகமாக அப்பகுதி வழியாக சென்று வருகின்றன. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் சாலையை அச்சத்துடன் கடந்து செல்கின்றன. வேகமாக சென்று வரும் வாகனங்களால் சிறு,சிறு விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதி சாலையில் தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.