சேவூர் - புளியம்பட்டி செல்லும் சாலையில் தண்டுக்காரன் பாளையத்தில் இருந்து தாளக்கரை லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலுக்கு செல்லும் வழியின் முகப்பில் விளம்பர தட்டிகள் அதிகமாக உள்ளது. இது இருசக்கர வாகனங்களில் வருவோர்க்கு மிகவும் இடையூறாக உள்ளது. குறிப்பாக இந்த விளம்பர தட்டிகளால் சாலை மறைக்கப்பட்டு இருப்பதால் விபத்து நடந்து விடுமோ என்ற அச்சத்திலேயே சென்று வருகிறார்கள். எனவே தண்டுக்காரன் பாளையத்தில் இருந்து தாளக்கரைக்கு செல்லும் சாலையில் உள்ள விளம்பர தட்டிகளை அப்புறப்படுத்த வேண்டும்.
ராமசாமி, தாளக்கரை.