தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்- பேய்குளம் மெயின் ரோட்டில் மேல வெள்ளமடம் கிராமத்தில் உள்ள குறுகிய பாலத்தின் இருபுறமும் தடுப்புச்சுவர் சேதமடைந்த நிலையில் உள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனத்தில் பாலத்துக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே அங்கு உயர்மட்ட பாலம் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.