திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம், சிட்கோ நகர் பகுதியில் புதிய சாலை அமைப்பதற்கான பணி சில நாட்களுக்கு முன்பு நடந்தது. புதிய சாலை அமைத்த பின்பு அந்த பகுதியில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. இந்த பள்ளத்தினால் இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றனர். மேலும், மழைக்காலங்களில் இந்த பள்ளம் குளம் போலவும் காட்சி அளிக்கிறது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.