சேதமடைந்த பெரியார் மேம்பாலம்

Update: 2025-04-13 17:42 GMT

சேலம் அரசு ஆஸ்பத்திரி அருகே பெரியார் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. காலை முதல் இரவு வரை இந்த மேம்பாலத்தில் பொதுமக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில் ரெயில்வே மேம்பாலத்தின் ஒரு புறம் உள்ள தடுப்புச்சுவர் முற்றிலும் சேதமடைந்துள்ளது. மேலும் மேம்பாலத்தின் நடைபாதையும் ஆங்காங்கே சேதமாகி உள்ளது. வாகனங்கள் செல்லும் போது அதிர்வு ஏற்பட்டு ரெயில்வே மேம்பால நடைபாதை முழுவதும் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது. எனவே சேதமடைந்த பாலத்தின் தடுப்புச்சுவர் மற்றும் நடைபாதையை அதிகாரிகள் சீரைமக்க வேண்டும்.

-கண்ணன், சேலம்.

மேலும் செய்திகள்